Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவிற்கு ஒரு நியாயம். இந்தியாவிற்கு ஒரு நியாயமா? கோபத்தில் ஹர்பஜன் சிங்

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (16:44 IST)
ஆஸ்திரேலிய வீரர் பேன் கிராஃப்ட்டிற்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் ஸ்மித்திற்கு ஒரு நாள் டெஸ்ட் போட்டில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் 100% அபராதமும், பேன்கிராப்டிற்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதமும் ஐசிசி விதித்துள்ளது. 
இந்நிலையில் ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், கடந்த 2001-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கங்குலி தலைமையில் தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி விளையாடிய போது, சச்சின் டெண்டுல்கர் பந்தை சேதப்படுத்தியதாக கூறி, சச்சின் மற்றும் ஷேவாக்குக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. நான், கங்குலி, ஷிவ் சுந்தர் தாஸ், விக்கெட் கீப்பர் தீப்தாஸ் குப்தா ஆகியோர் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தது ஐசிசி.
பேன் கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார் என்பதற்கு சிசிடிவி காட்சி ஆதாரம் இருந்த போதிலும் அவருக்கு விளையாடுவதிலிருந்து தடை விதிக்கவில்லை. ஆனால் பந்தை சேதப்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் சச்சின் உள்ளிட்ட 5 பேர் 3 விளையாட்டுகளில் விளையாட தடை விதிக்கப்பட்டோம். அதேபோல் சிட்னி மேட்சில் நடந்தவற்றை நினைவு கூறுங்கள். ஏன் இந்த ஓர வஞ்சனை. எங்களுக்கு ஒரு நியாயம் பேன்கிராஃப்டிற்கு ஒரு நியாயமா என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments