Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (17:46 IST)
கிரிக்கெட் வீரர்களை பொதுவாக 3 முக்கிய கிரேடிங்கில் வகைப்படுத்துவர். அவை எ, பி, சி. இதில் கிரேங்கிற்கு ஏற்ப சலுகைகளும், சம்பளமும் வீரர்களுக்கு வழங்கபப்டும். ஏ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் ரூ.12 கோடி. ஏ கிரேடில் விராட் கோலி, தோனி, அஸ்வின், ஜடேஜா, ரகானே, புஜாரா, முரளி விஜய் ஆகிய 7 வீரர்கள் உள்ளனர்.
 
பி கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 கோடி வழங்கப்படுகிறது. பி கிரேடில் ரோகித் சர்மா, ராகுல், முகமது ‌ஷமி உள்ளிட்ட 9 வீரர்கள் உள்ளனர். சி கிரேடு வீரர்களுக்கு ரூ.4 கோடி வழங்கப்படுகிறது. சி கிரேடில் தவான், மனிஷ் பாண்டே உள்ளிட்ட 16 வீரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், தோனியை ஏ+ வீரர்கள் பட்டியலில் இணைக்க பிசிசிஐ மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, தோனியின் சலுகைகள், சம்பளம், ஐசிசி ரேட்டிங் ஆகியவை பாதிக்கக்கூடும் என தெரிகிறது. 
 
கிரிக்கெட் வீரர்களுக்கு ஏ+ கிரேட் கொடுப்பதற்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். தோனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத காரணத்தினால், அவருக்கு எதற்கு உயர்ந்த கிரேட் என பல கேள்வி எழுப்பிவரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்கள் இந்திய அணியில் ரொட்டேஷன் பாலிசி காரணமாகவே விளையாடாமல் இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு ஏ+ கிரேட் கொடுக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments