Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு பாதை அமைத்துதந்த தோனி: சேவாக் போட்டுடைத்த உண்மை!!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (15:36 IST)
டெஸ்ட் அணியிலிருந்து கோலியை நீக்கும் முடிவை தடுத்து நிறுத்தியது முன்னாள் கேப்டன் தோனியும், தானும்தான் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். 


 
 
2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப் பயணம் செய்து, 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அப்போது, மெல்பர்னில் நடந்த முதல் டெஸ்டில் கோலி 11 ரன்னும், 2வது இன்னிங்சில் டக்கவுட்டுமானார். 
 
சிட்னியில் நடைபெற்ற 2வது டெஸ்டிலும் விராட் கோலி, சாதிக்கவில்லை. அவர் முதல் இன்னிங்சில் 23 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 9 ரன்களும் எடுத்தார்.
 
எனவே பெர்த்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் கோலியை நீக்கிவிட்டு, அவர் இடத்தில் ரோகித் ஷர்மாவை ஆடச் செய்ய தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த தோனியும், துணை கேப்டனாக இருந்த சேவாக்கும், இந்த முடிவை கைவிட கூறி, கோலியையே தொடரச் செய்துள்ளனர். 
 
இந்த டெஸ்ட் தொடரிலிருந்துதான் கோலி நல்ல ஃபார்முக்கு வந்தார்.  இந்திய டெஸ்ட் அணி கேப்டனாகவும் முன்னேறியுள்ளார். 

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments