நேற்றைய போட்டியில் தேவ்தத் படிக்கல் நிகழ்த்திய சாதனை!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:28 IST)
பெங்களூர் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் நேற்றைய போட்டியில் சதமடித்து அசத்தினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 178 ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் அந்த அணியின் 20 வயது தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 51 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதில் 11 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடக்கம்.

இதன் மூலம் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பே சதமடித்த மூன்றாவது இந்திய வீரராக சாதனைப் படைத்துள்ளார் படிக்கல். இதற்கு முன்னர் மனிஷ பாண்டே 2009 ஆம் ஆண்டிலும் பால் வால்தாட்டி 2011 ஆம் ஆண்டிலும் இதுபோல சதமடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments