Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு: இரு அணியிலும் சில மாற்றங்கள்!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (19:16 IST)
டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன
 
இந்த நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
டெல்லி அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் அடைந்திருந்த நிலையில் அவர் தற்போது குணமாகி விட்டதால் இன்றைய போட்டியில் விளையாடுகிறார். அவருக்கு பதிலாக அணியில் இருந்து அவெஷ்கான் நீக்கப்பட்டுள்ளார் 
 
அதேபோல் ஐதராபாத் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முகமது நபிக்கு பதிலாக கானே வில்லியம்ஸ் அணியில் இணைந்துள்ளார். அதேபோல் சாஹாவுக்கு பதிலாக அப்துல் சமது இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இரு அணிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். டெல்லி அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது என்பதும், ஐதராபாத் அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments