Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேவிஸ் கோப்பை டென்னிஸ். இந்திய அணி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (05:45 IST)
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ஆசிய- ஓசியானா மண்டல 2-வது சுற்று ஆட்டம் வரும் ஏப்ரல் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.




நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சீனியர் வீரர் லியாண்டர் பெயஸ்  இடம் பெற்றுள்ளார். அதேபோல் கடந்த ஆட்டத்தில் இடம் பெறாத ரோகன் போபண்ணாவுக்கு அணியில் இடம் கிடைத்து இருக்கிறது.

அதேபோல் ஒற்றையர் பிரிவில் சிறப்பு வீரர்களான யுகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன் மற்றும் இளம் வீரர்கள் ஸ்ரீராம் பாலாஜி, பிராஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இருப்பினும் இறுதிப்பட்டியல் உடல் தகுதி சோதனை முடிந்த பின்னர் அறிவிக்கப்படும்

மகேஷ்பூபதி தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட குழு முதல்முறையாக டேவிஸ் கோப்பையை சந்திக்கின்றது.

மேலும் கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போதுதான் பெங்களூருவில் டேவிஸ் கோப்பை போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்… சஞ்சய் மஞ்சரேக்கர் அறிவுரை!

ஏன் ஷுப்மன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு?... அதிருப்தியை வெளியிட்ட ஸ்ரீகாந்த்!

துணை கேப்டன் யார்? ரோஹித் சர்மா - கவுதம் கம்பீர் உரசல்!? காரணமான ஹர்திக் பாண்ட்யா!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன மே.இ.தீவுகள்..!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்… ரசிகர்கள் புலம்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments