Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலிழையில் வெற்றியை தவற விட்ட தமிழ் தலைவாஸ்

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (22:47 IST)
புரோ கபடி போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஒரே ஒரு புள்ளியில் வெற்றியை பறிகொடுத்தது.



 
 
ஏற்கனவே பெங்களூர் அணியுடன் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் அணி இன்றைய போட்டியில் டெல்லி அணியுடன் மோதியது.
 
ஆரம்பத்தில் இருந்தே இரண்டு அணிகளும் ஓரிரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே இருந்த நிலையில் ஆட்டம் முடிவதற்கு ஒரே ஒரு நிமிடம் முன்பு வரை தமிழ் தலைவாஸ் அணி தான் ஒரு புள்ளி அதிகம் இருந்தது.
 
ஆனால் கடைசி ரைடில் திடீரென இரண்டு புள்ளிகள் எடுத்த டெல்லி வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் 5 போட்டிகள் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றியும், ஒரு டிராவும், மூன்று தோல்வியுடன் 7 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments