Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அடுத்த வெற்றியை பார்க்க வேண்டுமா? CSK - RCB போட்டிக்கான டிக்கெட் விற்பனை..!

Siva
திங்கள், 24 மார்ச் 2025 (08:02 IST)
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சிஎஸ்கே அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணி அடுத்ததாக பெங்களூரு அணியுடன் வரும் 28ஆம் தேதி மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை-பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும், சிஎஸ்கே அணியின் அடுத்த வெற்றியை நேரில் பார்க்க விரும்புபவர்கள், டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த தொடரை பொருத்தவரை, சிஎஸ்கே மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டு அணிகளுமே தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் அணி எது என்பதை வரும் 28ஆம் தேதி தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோஃப்ரா அடித்து துவம்சம் செய்த SRH பேட்ஸ்மேன்கள்.. உலகளவில் மோசமான சாதனை!

வெறித்தன பேட்டிங்.. உலக சாதனைப் படைத்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

ருத்துராஜ், ரச்சின் அதிரடி அரைசதம்.. தோனிக்கு பில்டப் பாட்டு- மும்பையை வீழ்த்திய சி எஸ் கே!

ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்.. விடாமுயற்சி! போராடி தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

சதம் விளாசிய இஷான் கிஷன்.. சொல்லி அடித்த ஐதராபாத்! புதிய ரன் ரெக்கார்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments