சென்னை vs மும்பை – தொடரும் சேப்பாக்கம் பரிதாபங்கள் !

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (09:56 IST)
நேற்று நடைபெற்ற மும்பை, சென்னை அணிகளுக்கு இடையிலானப் போட்டியை வென்றதன் மூலம் முமபை அணி 8 ஆண்டுகால சாதனையைத் தக்க வைத்துள்ளது.

12 ஆவது ஐபிஎல் தொடரின் 44 ஆவது போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் மும்பை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. பவுலிங்கில் சிறப்பாக செயலாற்றிய சென்னை அணி பேட்டிங்கில் சொதப்பியதால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தோல்விக்கு முக்கியக் காரணமாக தோனி இல்லாதது சொல்லப்பட்டாலும் சென்னை அணி மும்பைக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் மோசமான புள்ளிவிவரங்களையே வைத்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சென்னையில் நடந்த ஒரு போட்டியில் கூட சென்னை அணி மும்பை அணியை வென்றதில்லை என்ற மோசமான சாதனையை தன் வசம் வைத்துள்ளது. இந்நிலையில் நேற்றையப் போட்டியில் வென்று அந்த கலங்கத்தைப் போக்கும் என நினைக்கையில் மீண்டும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த சீசனில் சென்னை அணி தனது மைதானத்தில் சந்திக்கும் முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்-லின் பெரியண்ணனாக இருந்துவரும் சென்னை அணி மும்பை அணியோடு மட்டும் மிகவும் மோசமான தோல்விகளையே தொடர்ந்து சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments