Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி சொல்லிதான் நாங்கள் சென்னையில் அதை செய்தோம்- சி எஸ் கே அணி நிர்வாகி பதில்!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (10:59 IST)
தோனி சொல்லிதான் சென்னையில் நான்கைந்து தினங்கள் பயிற்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டதாக சென்னை அணியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபின் நடக்கும் ஐபிஎல் தொடர் என்பதால் ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். இதற்காக சென்னையில் சில நாட்கள் பயிற்சியை மேற்கொண்ட சி எஸ் கே வீரர்கள் இப்போது துபாய்க்கு சென்று அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சி எஸ் கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ‘பயிற்சி விஷயமாக நான் தோனியிட்ம் பேசினேன். அப்போது அவர் ‘நாங்கள் 4-5 மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. அதனால் அணியின் வீரர்கள் அனைவரும் துபாய்க்கு செல்வதற்கு முன் சென்னையில் ஒன்றுக் கூட வேண்டும். நாங்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டும். அத்தகைய சூழல் துபாய் சென்ற பின்பும் எங்களுக்கு உதவும்' எனத் தெரிவித்தார். அதனால்தான் நாங்கள் சென்னையில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments