Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் அருகே விவசாயிகளைக் கடித்த முதலைகள்!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (11:41 IST)
சிதம்பரம் அருகருகே இரு இடங்களில் முதலைகள் இரு விவசாயிகளைக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை என்ற பகுதியில் உள்ள பனங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் வாய்க்காலில் முகம் கழுவும்போது அங்கிருந்த முதலை அவரின் முகத்தில் கடித்துள்ளது. இதையடுத்து அவர் கூச்சல் போடவே அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வனத்துறையினர் வந்து அந்த முதலையைக் கைப்பற்றினர்.

இதேபோல சிதம்பரம் அருகே குமராட்சி அருகே மாரியப்பன் என்பவர் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அவரை முதலை வயிறு மற்றும் தொடைப் பகுதியில் கடித்துள்ளது. அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments