Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விலைபோகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விலைபோகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ
, புதன், 4 பிப்ரவரி 2015 (18:22 IST)
போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் விலை ரூ. 6 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 
போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2009ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அவரை ரியல் மாட்ரிட் அணி விடுவித்தால் அவரது விலை 6 ஆயிரம் கோடியாக இருக்கும் என அவரது உதவியாளர் மெண்டஸ் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ரொனால்டோவின் உதவியாளர் மெண்டஸ் கூறுகையில், "உங்களால் எந்த ஒரு கால்பந்து வீரருடனும் ரொனால்டோவை ஒப்பிட முடியாது. அவர் எப்பொழுதும் தலை சிறந்த வீரர். தலை சிறந்த விளையாட்டு வீரர்.
 
அவரின் ஆரம்ப விலை 1 பில்லியன் ஆகும். ஆனால் ஏதேனும் ஒரு காரணத்திற்காக ரியல் மாட்ரிட் கிளப் அவரை விடுவித்தால், அவரை மற்ற அணியினர் 300 மில்லியன் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
 
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருதினை மூன்று முறை ரொனால்டோ வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil