முகமது ஷமியை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (07:59 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணியின் பவுலர்கள் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி சமீபத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஷமியும் மற்றும் அவரது சகோதரன் ஹசித் அகமது ஆகிய இருவர் மீது ஹசின் ஜகான் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
 
இது தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை உத்தரவிட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து முகமது ஷமி 15 நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்ய அலிப்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் பயணம் மேற்கொண்டுள்ள ஷமி இந்தியா திரும்பியதும் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 ஆண்டுகளுக்குப் பிறகு பிக்பாஷ் தொடரில் களமிறங்கும் மிட்செல் ஸ்டார்க்!

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

அடுத்த கட்டுரையில்
Show comments