Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கொரொனா பரிசோதனை முடிவு வெளியானது ! ரசிகர்கள் திக்..திக் திக்

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (15:40 IST)
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள 12 உதவியாளர்கள் மற்றும் ஒரு வீரருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதலை நீட்டித்து ஐபிஎல் நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸைச் சேர்ந்த அனைத்து வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில்  அவர்களுக்கு நெகட்டின் ரிசல்ட் வந்துள்ளன.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் தொடரில் தோனி கூட படைக்காத சாதனையை கேப்டனாக படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ரசிகர்களின் பொறுமையை சோதித்த ஐபிஎல் நிர்வாகம்… இவ்ளோ லேட்டாவா விருது வழங்குவது?

“இந்திய அணிக்கு போகாதீங்க… எங்க கூடவே இருங்க”- கம்பீருக்கு ப்ளாங்க் செக் கொடுத்த ஷாருக் கான்?

தோனியின் முக்கியமான சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை இழந்த பேட் கம்மின்ஸ்!

மனைவியை விவாகரத்து செய்யும் ஹர்திக் பாண்ட்யா… 70 சதவீதம் சொத்துகளை ஜீவனாம்சமாகக் கொடுக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்