Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள் ...

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (17:32 IST)
ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்றதால் 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி சரித்திர சாதனையை பதிவு செய்துள்ளது.
தொடரில் யார் வெல்வது என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று மெல்போர்னில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். 
 
ஆஸ்திரேலியா அணி 48. 4 ஓவரில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியில் ஹன்ஸ்கோம் 58 ரன்களும், ஷான்மார்ஷ்  39ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து இந்திய அணி 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி கடுமையாக சவாலை எதிர்கொண்டு ஆஸ்திரேலியா பந்து வீச்சை சமாளித்து விளையாடியது.
 
இதில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழந்து 49.2 ஓவரில் 234 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்து களத்தில் அவுட்டாகாமல் இருந்தார். தோனியுடன் கைகோர்த்த ஜாதவ் 61 ரன்கள் எடுத்து  இறுதி வரை களத்தில் நின்றார். இதனால் இந்திய அணி கோப்பை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
 
ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக இருதரப்பு தொடரை வென்றுள்ளது இந்திய அணி. டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் இந்திய அணி வென்றதால் பல்வேறு தரப்பினர் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments