Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு: ஹரியானா அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 31 ஜூலை 2014 (09:36 IST)
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து ஹரியானா மாநில முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா கூறியதாவது:-

ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் ஹரியானாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அதிகரித்து அளிப்பது என்று மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.25 லட்சமும் ஊக்கத்தொகையாக கிடைக்கும்.

முன்பு தங்கம் வெல்பவருக்கு ரூ.15 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வெல்பவருக்கு ரூ.10 லட்சமும், வெண்கலப்பதக்கம் வெல்பவருக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டு வந்தது.

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடியாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாகவும், வெண்கலம் பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாகவும் ஊக்கத்தொகை உயர்த்தப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.5 கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெண்கலப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.2 கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நடப்பு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் இதுவரை 3 தங்கப்பதக்கமும், 5 வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர்.

அவர்கள் நாடு திரும்பியதும் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கப்படுவார்கள். தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து அரசு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும்“. இவ்வாறு பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

Show comments