Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் விளையாட்டு: வெண்கலம் வென்றார் குத்துச் சண்டை வீராங்கனை பிங்கி ஜங்ரா

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2014 (11:18 IST)
மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியின் 51 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் பிங்கி ஜாங்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் 20 ஆவது காமன்வெல்த் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வெள்ளிக்கிழமை (01.08.2014) நடைபெற்ற மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியின் அரையிறுதியில் பிங்கி ஜாங்ரா, வடக்கு அயர்லாந்தின் மைக்கேலா வால்ஷை எதிர் கொண்டார்.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந் பிங்கி முதல் சுற்றில் ஒரு புள்ளி பின் தங்கியிருந்தார். 2 ஆவது சுற்றில் 2 புள்ளிகளும், 3 ஆவது சுற்றில் மூன்று புள்ளிகளும் பின்தங்கினார். இதைத் தொடர்ந்து அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இது குறித்து பிங்கி ஜங்ரா கூறுகையில், "மைக்கேலா வால்ஷ் சிறந்த வீராங்கனை. இந்த ஆட்டத்தில் நான் சில தவறுகளைச் செய்தேன். வெற்றிக்கு தேவையான சிறந்த பங்களிப்பை அளித்ததாகக் கருதவில்லை.

இருப்பினும் முடிந்தவரை வெற்றிக்கு முயற்சித்தேன். என் தவறுகளைக் கண்டறிந்து, அதை சரி செய்வது குறித்து பயிற்சியாளருடன் ஆலோசித்து, அடுத்த போட்டியில் முழு வீச்சில் எழுச்சி பெறுவேன்' என்றார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரி கோமை வீழ்த்தி காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றவர் பிங்கி ஜாங்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

Show comments