Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகப் புகழ்பெற்ற ’பேஸ் ஜம்ப்’ வீரர்கள் தவறி விழுந்து மரணம்

உலகப் புகழ்பெற்ற ’பேஸ் ஜம்ப்’ வீரர்கள் தவறி விழுந்து மரணம்
, திங்கள், 18 மே 2015 (20:54 IST)
உலகின் மிகவும் புகழ்பெற்ற பேஸ் ஜம்பிங் வீரர்கள் இருவர் ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும்போது தவறி விழுந்து மரணமடைந்துள்ளனர்.
 
டீன் பூட்டர்(43) மற்றும் அவரது தோழரான கிராஹம் ஹன்ட் (29) ஆகியோர் ’பேஸ் ஜம்ப்’ எனப்படும் சாகச நிகழ்ச்சிகளில் பேர் பெற்றவர்கள். இவர்களின் சாகச நிகழ்ச்சிகள் காண்பவர்களை மயிர் கூச்செரிய வைப்பவையாகும்.
 

 
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கலிபோர்னியாவில் உள்ள யொஸேமைட் பள்ளதாக்கு பகுதியில் ஹெலிகாப்டரில் இருந்தவாறு இரு பாறைகளுக்கு இடையில் குதிக்க முயன்றுள்ளார்கள். அப்போது, எதிர்பாரதவிதமாக பாறை ஒன்றின் மீது மோதி இருவரும் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
கடந்த ஆண்டு ஒரு வீடியோ நேர்காணலின்போது பதிலளித்த பூட்டர், “நான் சிறுவயது பையனாக இருந்தபோது பறப்பது போன்று கனவு கண்டேன். அந்த கனவில் நான் பறந்தேன்.. விழவும் கூட செய்தேன்” என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், “எனக்கு வயதாகும்போது, சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளால் நான் விழுந்து மரணமடைவதிலிருந்து தப்பினால் நான் வியப்படைவேன்” என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கு அவரது வாழ்க்கை வாய்ப்பளிக்கவில்லை.

அவரின் சாகத்தில் ஒன்று:
 

Share this Story:

Follow Webdunia tamil