Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் வருவாரா? தேர்வுக்குழு தலைவர் கருத்து!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (09:40 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவராக உருவாகி வந்த ஹர்திக் பாண்ட்யா இப்போது இடம் கிடைக்காமல் ஓரம் கட்டப்பட்டுள்ளார்.

அதிரடி பேட்டிங், மிகவேகப்பந்து வீச்சு என அடுத்த கபில்தேவ் என சொல்லப்படும் அளவுக்கு உருவாகி வந்தார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் இடையில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தாலும், பார்ம் இல்லாத காரணத்தாலும், அவர் அணியில் இருந்து வெளியேறினார். மீண்டும் அணிக்குள் வந்தாலும் அவர் பந்துவீசவில்லை. பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் இப்போது வெங்கடேஷ் ஐயர், ஸ்ரெயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பின்வரிசை பேட்டிங்கில் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்குள் திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ‘பாண்ட்யா முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுவரை நாங்கள் அவரைக் கருத்தில் கொள்ள முடியாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

பீல்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா செய்த மிகப்பெரிய தவறு: நோபால் கொடுத்த அம்பயர்..!

நான்காவது அணியாக ப்ளே ஆஃப்க்கு சென்ற மும்பை இந்தியன்ஸ்!

என்னால் விளையாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்கள் – தோனியை சாடிய ஸ்ரீகாந்த்!

இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி… மே 24 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments