Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் செஸ் க்ராண்ட் மாஸ்டரான ப்ரனேஷ்! – தமிழ்நாட்டிற்கு மற்றொரு பெருமை!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (11:38 IST)
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ப்ரனேஷ் க்ராண்ட் மாஸ்டராக உயர்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டை சேர்ந்த 15 வயதான இளம் செஸ் வீரர் ப்ரனேஷ். தனது சிறுவயதிலிருந்தே செஸ் விளையாட்டு மீது தீராத ஆர்வம் கொண்ட ப்ரனேஷ் பல்வேறு தேசிய, உலகளாவிய போட்டிகளில் கலந்து கொண்டு வென்று செஸ் மாஸ்டராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தி நடைபெற்ற ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டியில் 9 போட்டிகளில் 8 புள்ளிகள் பெற்ற ப்ரனேஷ் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தில் இருந்து க்ராண்ட் மாஸ்டராக உயர்ந்து சாதனை படைத்துள்ளார். ப்ரனேஷ் இந்தியாவின் 79வது க்ராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டிலிருந்து செஸ் விளையாட்டில் க்ராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் 28வது வீரர் ப்ரனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments