Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

Prasanth Karthick
வியாழன், 19 செப்டம்பர் 2024 (08:55 IST)

ஹங்கேரியில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை நடந்த 7 சுற்றுகளிலுமே தொடர் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.

 

 

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 11ம் தேதி ஹங்கேரியில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடக்கும் இந்த போட்டியில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்கின்றன.

 

இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து ஓபன் பிரிவில், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, ஹரிக்ரிஷ்ணா பெந்தாலா ஆகியோர் உள்ளனர்.

 

மகளிர் பிரிவில் அணியில் ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 

ALSO READ: பிரபல பாடகியோடு நெருக்கம் காட்டும் ஜெயம் ரவி?... இதுதான் விவாகரத்துக்கு காரணமா?
 

மொத்தம் நடக்கும் 11 சுற்றுகளில் அதிக வெற்றி பெற்று தரவரிசையில் முதல் இடம் பெறும் நாடு தங்க பதக்கத்தை வெல்லும். இந்நிலையில் இதுவரை நடந்த 7 சுற்று போட்டிகளிலும் இந்தியாவின் ஓபன் அணி, மகளிர் அணி என இரண்டு அணிகளுமே தொடர் வெற்றி பெற்று தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளன.

 

நேற்று நடந்த 7வது சுற்றில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்ட நிலையில் 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது. இந்திய மகளிர் அணி ஜார்ஜியாவுடன் மோதிய நிலையில் 3-1 என்ற கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

 

11 சுற்றுகளில் 7 சுற்றுகளுக்கு தொடர் வெற்றி பெற்றுள்ள இந்தியா இன்னும் சில சுற்றுகளே உள்ள நிலையில், அதையும் வென்றால் தங்கம் வெல்வது உறுதியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டீவ் ஸ்மித் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா…!

கோலியின் செயல் தேவையற்றது… ரவி சாஸ்திரி கண்டனம்!

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

தோனியப் பாத்தே பத்து வருஷம் இருக்கும்… மீண்டும் சி எஸ் கேவுக்கு செல்வது குறித்து அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments