Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎல் கிரிக்கெட்: காரைக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லிஸ்

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (22:51 IST)
இன்றைய டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் காரைக்குடி காளை அணியும் மோதியது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ்அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு விளைநிலத்தில் 175 ரன்கள் எடுத்தது. கோபிநாத் 55 ரன்களும் கங்கா ஸ்ரீதர் ராஜூ 54 ரன்களும் காந்தி 32 ரன்கள் எடுத்தனர் 
 
இதனை அடுத்து 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய காரைக்குடி காளை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது. காரைக்குடி அணியின் ஷாஜஹான் 27 ரன்களும் மகேஷ் 22 ரன்கள் எடுத்தனர். 
 
இதனை அடுத்து சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜி பெரியசாமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் 
 
இன்றைய போட்டியை அடுத்து சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி இரண்டு வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் திண்டுக்கல் அணியும் அணி உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வி அடைந்த காரைக்குடி காளை அணி 7வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments