Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னை-கோவா அணிகள் பலப்பரிட்சை

Webdunia
புதன், 15 அக்டோபர் 2014 (16:28 IST)
8 அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 4 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–கோவா எப்.சி ஆகிய அணிகள் மோதவுள்ளன.
 
ஐ.பி.எல் வரிசையில் தற்போது புதியதாக இணைந்துள்ளது ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள். இப்போட்டிகள் அக், 12 தொடங்கி டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சூப்பர் லீக்கின் தொடக்க ஆட்டத்தில் அட்லெடிகா கொல்கத்தா அணி 3–0 என்ற கோல் கணக்கில் மும்பையை வென்றது. மேலும் 2 ஆவது ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடட் 1–0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது. டெல்லி டைனமோஸ்–புனே சிட்டி அணிகள் அக், 14 நேற்று மோதிய 3 ஆவது லீக் ஆட்டம் கோல் அடிக்கப்படாமல் டிராவில் முடிந்தது.
 
இந்நிலையில் அக், 15 இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை எப்.சி.–கோவா எப்.சி ஆகிய அணிகள் பனாஜியில் மோத காத்துக்கொண்டிருக்கின்றன. நமது சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். எலனோ, சில்வர் ஸ்டார் போன்ற சர்வதேச வீரர்கள் சென்னை அணியில் உள்ளனர்.
 
கோவா அணியை எடுத்துக்கொண்டால் ராபர்ட் பியர்ஸ், கலோவ் போன்ற வீரர்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக்காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

Show comments