Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிமியர் பேட்மிண்டன் லீக் ஆரம்பம்: முதல் ஆட்டத்தில் விஜயகாந்த் மகன் அணி வெற்றி

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (06:47 IST)
ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் இந்த ஆண்டு போட்டி நேற்று முதல் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும் சென்னை ஸ்மார்ஷர்ஸ் அணியும் மோதியது. சென்னை ஸ்மாஷர்ஸ் அணி கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு சொந்தமான அணி என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஆட்டத்தில் சென்னை ஸ்மார்ஷர்ஸ் அணியின் பி.வி.சிந்து, பெங்களூரு அணியின் கிறிஸ்டி கில்மவுரை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் 15-9,15-14 என்ற நேர் செட்களில் சிந்து வெற்றி பெற்றார்.

மேலும் இதே தொடரில் முதல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெங்களூரு அணியின் விக்டர் அலெக்சன் வெற்றி பெற்றார்

இரண்டாவது ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெங்களூருவின் சுபாங்கர் தேய் 15-12, 15-12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் சென்னையின் சுமீத் ரெட்டி - லீ யங் ஜோடி 8-15,15-14,15-13 என்ற செட்களில்  வெற்றி பெற்றது.

கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் 15-14,15-11 என்ற நேர் செட்களில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது

இன்று நடைபெறும் போட்டிகளில் மும்பை ராக்கெட்ஸ் - அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணிகள் விளையாட உள்ளன
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments