Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியாளருக்கு அடி, உதை: டேபிள் டென்னிஸ் வீராங்கனை சஸ்பெண்ட்

Webdunia
புதன், 14 ஜனவரி 2015 (13:34 IST)
ஆந்திராவில் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஒருவர், பயிற்சியாளருடன் தகராறில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கடந்த மாதம் நடைபெற்ற 76வது தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 16 வீரர், வீராங்கனைகள் சென்றிருந்தனர்.
 
இந்நிலையில், ஹோட்டல் அறையில் தங்கி இருந்த சத்தீஸ்கர் மாநில டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஒருவர், பயிற்சியாளருடன் தகராறில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
 
இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று சத்தீஸ்கர் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் செயலாளர் அமிதாப் ஷுக்லா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சத்தீஸ்கர் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தகுழு 3 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

Show comments