Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்களும் உங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை … ஆமை வேகத்தில் ஆஸி – கணக்கைத் தொடங்கிய பூம்ரா!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (11:11 IST)
ஆஸி அணி தனது முதல் இன்னிங்ஸை ஆமை வேகத்தில் விளையாடி வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடந்து வருகிறது. இதில் முதல்நாளில் பேட் செய்த இந்திய அணி 233 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது. இன்று பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா மேலும்  11 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இந்தியாவை விட பொறுமையாக விளையாடினர். ரன் எடுக்கும் எண்ணமே இல்லாமல் பேட்டில் தெரியாமல் பட்டு ஓடிய பந்துகளுக்கு மட்டுமே ரன்கள் எடுத்த நிலையில் 14 ஓவர்களில் 16 ரன்களே எடுத்தனர். 15 ஆவது ஓவரை வீசிய பூம்ரா தொடக்க ஆட்டக்காரர் மேத்யு வேட்டை எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழக்கச் செயதார். வேட் 51 பந்துகளில் வெறும் 8 ரன்களே சேர்த்தார். இப்போது களத்தில் லபுஷனே மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகியோர் முறையே 4 மற்றும் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments