Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஐபிஎல் தொடக்கவிழா.. பாலிவுட் நடிகைகள் பங்கேற்பு..!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (15:04 IST)
மகளிர் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் 5 அணிகள் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த அணிகளுக்கான வீராங்கனைகள் சமீபத்தில் ஏலம் எடுக்கப்பட்டனர் என்பது தெரிந்தது. இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்க இருப்பது என்பதும் முதல் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் போட்டியை 7:30 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் அதே நாளில் ஐந்து முப்பது மணி முதல் தொடக்க விழா நடைபெறும் 
 
இதில் பிரபல பாலிவுட் நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக க்யாரா அத்வானி, கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் இன்னும் சிலரிடம் இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் ஒருநாள் போட்டி.. சுப்மன் கில் அபார பேட்டிங்.. வெற்றியுடன் தொடங்கிய இந்தியா..!

ஜெய்ஸ்வால் உள்ளே… கோலி வெளியே – இந்திய அணியில் நடந்த அதிரடி மாற்றம்!

திடீரென ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய அணி வீரர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் ஒரு இந்திய நடுவர் கூட இல்லை… வெளியான பட்டியல்!

அடுத்த கட்டுரையில்
Show comments