Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு அக்னிப்பரிட்சை: திருமணம் முடிந்தவுடன் கண்டமா??

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (13:38 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை கைப்பற்றியது. அடுத்து தென் ஆப்பிரிக்காவில் விளையாடுகிறது. இதற்காக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. 
 
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5 ஆம் தேதி 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 
திருமணத்திற்காக எடுத்த ஓய்வை முடித்துக்கொண்டு கோலி தென் ஆப்பிரிக்கா தொடரில் விளையாட சென்றுள்ளார். இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்காவுடனான போட்டி கடும் சவாலாக இருக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
தென் ஆப்பிரிக்காவில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சதகமானது. எனவே, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் காத்திருக்கிறது என தெரிகிறது. அதேபோல் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இந்த போட்டி முக்கியமானதாகும். அதுவும் முக்கியமாக கோலியின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் திறமைகளுக்கு கடும் சவாலாக அமையும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் பேடி தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது, கோலி இன்னும் கடினமான சவால்களை சந்திக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா தொடரில் கோலி தடுமாற கூடும். தென் ஆப்பிரிக்கா தொடர் கோலிக்கு ஒரு அக்னிப்பரிட்சை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments