Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோஹ்லி இஸ் எ ஜோக் – நெட்டிசன்களிடம் மாட்டிய பென் டக்கட் !

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (10:06 IST)
இந்திய கேப்டன் விராட் கோஹ்லியை ஒரு ஜோக் எனக் கூறிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட்டை நெட்டிசன்கள் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

பென் டக்கட் இங்கிலாந்துக்காக சில சர்வதேசப் போட்டிகளை விளையாடியுள்ளார். ஆனால் தொடர்ந்து அவருக்கு அணியில் இடம் கிடைக்காததால் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார்.  கடந்த வாரம் வரை இவர் யாரென்றே தெரியாத நிலையில் இப்போது இவர் விராட் கோஹ்லியின் மூலம் லைம் லைட்டுக்கு வந்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கிரிக்கெட் ஷவுட்ஸ் என்ற தனது ட்விட்டர் கணக்கில், ‘விராட் கோலி இஸ்-----’ என்று குறிப்பிட்டு வெற்றிடத்தை பூர்த்தி செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார். ரசிகரின் இந்த அழைப்பை ஏற்ற பென் டக்கட் இந்த வாக்கியத்தைப் பூர்த்தி செய்யும்போது பென் டக்கெட் ‘எ ஜோக்’ என்று பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவ பென் டக்கட்டுக்கு எதிராகக் களமிறங்கினர் கோஹ்லி ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும்.

’இதைத் தொடர்ந்து பென் டக்கட்டை கேலி செய்யும் விதமாகப் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றன. அவற்றில் சில கமெண்ட்கள்
உங்களைப்பற்றி கேட்கவில்லை பென் டக்கெட்..
மருத்துவரைப் பாருங்கள்... நீங்கள் விரைவில் மனநலம் பெற பிரார்த்திக்கிறோம்
நீங்கள் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு இதைச் சொல்லியிருக்கிறீர்கள்.. சரியா?’
எனப் பலவாறு கூறியுள்ளனர். இதனால் கிரிக்கெட் உலகில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் எடுத்த 100.. ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தல்..!

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments