Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல், பாண்ட்யா வுக்கு பிசிசிஐ நோட்டீஸ் – காஃபி வித் கரண் ஷோவால் வந்த வினை

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (16:42 IST)
காஃபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரியக் பதில்களைக் கூறிய  இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் பங்குபெற்ற காஃபி வித் கரண் ஜோஹர் நிகழ்ச்சி ஒளிப்பரப்பனது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினார். இதில் சமூகவலைதளங்கள், பெண்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பாண்ட்யா மற்றும் ராகுல் இருவரும் சர்ச்சைக்குரிய பதிலைக் கூறினர்.

இதையடுத்து பாண்ட்யா மற்றும் ராகுலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அதனால் அடுத்த 24 மணிநேரத்துக்குள் பாண்டியா, ராகுல் இருவரும் அவர்களின் பேச்சுககு ம்விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நியமன கிரிக்கெட் கமிட்டி தலைவர் விநோத் ராய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சர்ச்சைகள் பெரிதானவுடன் பாண்ட்யா தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். அவர் ‘உண்மையில் எனக்கு யாரையும் புண்படுத்தவோ நோகடிக்கவோ சிறிதும் எண்ணம் இல்லை. நான் நிகழ்ச்சியின் போக்கில் உற்சாகமாகி அப்படிக் கூறிவிட்டேன்’ என விளக்கமளித்துள்ளார். ஆனால் ராகுலிடம் இருந்து இன்னும் எந்த விளக்கமும் வரவில்லை.

இந்த சர்ச்சையால் இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக கிரிக்கெட் அல்லாத நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதைத் தடை செய்ய பிசிசிஐ பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments