Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகப்பெரிய மைதானம் – புகைப்படத்தை வெளியிட்ட பிசிசிஐ !

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (10:16 IST)
உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மைதானம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகி வரும் அகமதாபாத் மைதானத்தின் முழு வடிவ புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம்தான் இது வரை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருந்து வருகிறது. இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கலாம். இந்நிலையில் அதை விட பெரிய மைதானமாக மொடீரா ஸ்டேடியம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மைதானம் 63 ஏக்கர்களில், 110,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. 700 கோடி ரூபாய் செலவில் மைதானத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 2020-ல் ஸ்டேடியம் முழுதும் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்டேடியத்தில் மார்ச் மாதம் நடக்க இருந்த ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கான போட்டியை நடத்த பிசிசிஐ தலைவர் விரும்பினார். ஆனால் கட்டுமானப் பணிகள் முடியாததால் பங்களாதேஷுக்கு அந்த போட்டிகள் மாற்றப்பட்டன. இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அந்த மைதானத்தின் முழுவடிவப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments