Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 நாளில் ஐபிஎல் தொடரை முடிக்க வேண்டும்… அனைத்து வாரியங்களுடனும் பேசும் பிசிசிஐ!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (07:54 IST)
ஐக்கிய அரபுகள் நாட்டில் எஞ்சிய ஐபிஎல் தொடர் நடப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அனைத்து நாட்டு வீரர்களையும் தொடரில் பங்கேற்க வைப்பதற்கான வேலைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளது.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் டி20 போட்டிகள் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலையில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்திருந்த நிலையில் மீதம் உள்ள 31 போட்டிகளை கடந்த ஆண்டை போல அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த எஞ்சிய போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பது கடினம் என சொல்லப்படுகிறது.

ஏனென்றால் பல கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்கான சர்வதேச தொடர்களுக்கான திட்டங்களை வைத்துள்ளனர். இதனால் ஐபிஎல் க்காக வீரர்களை அனுப்புவது கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் ஐபிஎல் தொடரின் விறுவிறுப்பு குறையும் என்பதால் பிசிசிஐ இப்போது எல்லா கிரிக்கெட் வாரியங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோஃப்ரா அடித்து துவம்சம் செய்த SRH பேட்ஸ்மேன்கள்.. உலகளவில் மோசமான சாதனை!

வெறித்தன பேட்டிங்.. உலக சாதனைப் படைத்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

ருத்துராஜ், ரச்சின் அதிரடி அரைசதம்.. தோனிக்கு பில்டப் பாட்டு- மும்பையை வீழ்த்திய சி எஸ் கே!

ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்.. விடாமுயற்சி! போராடி தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

சதம் விளாசிய இஷான் கிஷன்.. சொல்லி அடித்த ஐதராபாத்! புதிய ரன் ரெக்கார்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments