Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்- இந்த முறையாவது வெல்லுமா ஆப்கானிஸ்தான்

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (19:23 IST)
ஆப்கானிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் இடையேயான ஒருநாள் உலககோப்பை ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 263 ரன்களை இலக்காக கொடுத்துள்ளது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. சிறப்பாக ஆடிய வங்காளதேசம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்துள்ளது வங்க தேசம். சாயிப் அல் ஹசனும், ரஹீமும் ஆளுக்கொரு அரை சதத்தை எடுத்து ரன்களை அதிகப்படுத்தினர். ஏற்கனவே இரண்டு ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ள வங்கதேசம் இந்த ஆட்டத்தில் வென்றாலும் மேலும் மூன்று ஆட்டங்களில் வென்றால்தான் அரையிறுதிக்கு செல்ல முடியும்.

அதேசமயம் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த ஆட்டத்திலும், அடுத்து வரும் மூன்று ஆட்டங்களிலும் வெற்றிபெற்றாலும் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாது.

இருந்தாலும் ஒரு தடவை கூட வெற்றிபெறவில்லையென்றால் ஆப்கானிஸ்தானுக்கு இந்த உலக கோப்பை பெரும் மானக்கேடாக போய்விடும். இன்றாவது ஆப்கானிஸ்தான் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments