Webdunia - Bharat's app for daily news and videos

Install App

150 ரன்னுக்கு சுருண்ட பங்களாதேஷ் ! – தெறிக்கவிட்ட இந்திய பவுலர்கள் !

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (15:17 IST)
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பங்களோதேஷ் அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வங்கதேச அணி டி 20  தொடரை முடித்துவிட்டு இப்போது டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணித் தலைவர் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த வங்கதேச வீரர்கள் ரன்களையும் சேர்க்க முடியாமல் விக்கெட்களையும் காப்பாற்ற முடியாமல் தடுமாறினர்.

அந்த அணியின் முஷ்புஹீர் ரஹிம் (43), மற்றும் கேப்டன் மோனிமல் ஹாக் (37) ஆகியோர் மட்டுமே சிறிதுநேரம் தாக்குப்பிடித்தனர். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆக அந்த அணி ஒருநாள் கூட நிலைக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், முகமது ஷமி 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments