Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடித்தது 3 ரன்கள் தான்.. ஆனால் கிடைத்தது 7 ரன்கள்.. பயிற்சி ஆட்டத்தில் சுவாரஸ்யம்..!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (07:50 IST)
பாகிஸ்தான் மற்றும்  ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்த பயிற்சி ஆட்டத்தில் மூன்று ரன்கள் அடித்த பேட்ஸ்மேனுக்கு 7 ரன்கள் கிடைத்த ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது.  

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது நாளான நேற்று ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தபோது மேட் ரென்ஷா ஒரே பந்தில் 7 ரன்கள் அடித்தார்.

 அவர் அப்ரார் வீசிய பந்தை அடித்த போது அந்த பந்து பவுண்டரியை நோக்கி சென்றது. பில்டர் அந்த பந்தை தடுத்து விக்கெட் கீப்பரை நோக்கி எறிந்தார். ஆனால் அதற்குள் மேல் மூன்று ரன்கள் ஓடி விட்டார். அவருக்கு மூன்று ரன்கள் கிடைத்தது. இந்த நிலையில்  எல்லைக்கோட்டுக்கு அருகில் இருந்து வந்த பந்தை  ரன் அவுட் செய்வதற்காக  பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் எறிந்த நிலையில் அந்த பந்து ஓவர் த்ரோ என்ற வகையில் கூடுதலாக நான்கு ரன்கள் கிடைத்தது.

இதனை அடுத்து ஒரே பந்தில் 7 ரன்கள் பெற்ற மேட் ரென்ஷா அரை சதத்தை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments