Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்சியை தொடர்ந்து ஆஸ்திரிய கால்பந்து அணி கேப்டன் பியூச் ஓய்வு அறிவிப்பு

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (18:25 IST)
ஆஸ்திரிய நாட்டு கால்பந்து அணியின் கேப்டன் பியூச் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


 

 
யூரோ கால்பந்து தொடரில் இருந்து ஆஸ்திரிய அணி வெளியேறுவதையடுத்து அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
 
தற்போது 15வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடை பெற்று வருகிறது. இதில் குரூப்-எப் ப்ரிவில் ஆஸ்திரிய அணி விளையாடியது. லீக் சுற்றில் ஹங்கேரி மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோல்வி அடைந்தது. போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியை டிரா செய்தது. இதனால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
 
இந்நிலையில்தான், ஆஸ்திரிய அணியின் கேப்டன் பியூச், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். தன்னுடைய ஓய்வு பற்றி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் “ ஐஸ்லாந்து அணிக்கு எதிராக விளையாடியதுதான் எனக்கு கடைசி போட்டி. தேசிய அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடியது பெருமையாக உள்ளது. நாட்டுப்பற்றுடனே எல்லாவற்றையும் செய்தேன். ஆஸ்திரிய அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற என் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
சமீபத்தில்தான், அர்ஜெண்டியா அணி கேப்டன் மெஸ்சி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இங்கிலாந்தில் இருந்துகொண்டு யோயோ டெஸ்ட்டில் கலந்துகொண்ட கோலி.. கிளம்பிய சர்ச்சை!

மூன்று மாதத்தில் 20 கிலோ எடையைக் குறைத்த ரோஹித் ஷர்மா… வைரலாகும் புதிய தோற்றம்!

மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்கவேண்டும்… துக்கமான நாளாகிவிட்டது- கோலி வருத்தம்!

காஸ்ட்லியான கால்பந்து வீரர்கள்..! வீரர்களை வாங்க ₹35,000 கோடி செலவு செய்த அணி உரிமையாளர்கள்..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் ‘பாஸ்’ ஆன கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments