Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பாகிஸ்தான் தொடரை நடத்த விரும்புகிறோம்… ஆஸி கிரிக்கெட் வாரியம் ஆசை!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (22:35 IST)
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் கலந்துகொள்ளும் முத்தரப்பு தொடரை நடத்த ஆர்வம் தெரிவித்துள்ளது ஆஸி கிரிக்கெட் வாரியம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஒரு போர் போல ஊடகங்களாலும், ரசிகர்களாலும் மிகைப்படுத்தப்பட்டு பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தை விட இந்தியா பாகிஸ்தான் போட்டியைதான் அதிக ரசிகர்கள் பார்த்தார்கள் என்பதே அதற்கு சான்று.

இத்தனைக்கும் இவ்விரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்களில்  மட்டுமே நேருக்கு நேர் கலந்துகொள்கின்றன. தனியாக இருநாட்டுத் தொடர் நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுபற்றி இப்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலியைக் கேட்ட போது ‘அதை இரு நாட்டு அரசுகள்தான் முடிவு செய்யமுடியும். இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்ய முடியாது’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆஸி கிரிக்கெட் வாரியத் தலைவர் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா கலந்துகொள்ளும் முத்தரப்பு தொடரை தங்கள் நாட்டில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments