Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது டி20 போட்டி: கோஹ்லி, தோனி அதிரடி ஆட்டம்

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (20:24 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையில் டி20 போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று பெங்களூரில் 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் அதிரடியாக 26 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார். ஆனால் தவான் மிகவும் மந்தமாக விளையாடி 24 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். மேலும் ரிஷப் பண்ட் ஒரே ரன்னில் அவுட் ஆனதால் இந்தியாவின் ஸ்கோர் மந்தமாகவே இருந்தது.
 
ஆனால் கேப்டன் விராத்கோஹ்லி அதிரடியாக 29 பந்துகளில் அரை சதம் அடித்து ஸ்கோரை ஓரளவு அதிகப்படுத்தியுள்ளார். இந்திய அணி சற்றுமுன் வரை 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்வுக்குழு மீட்டிங்கை பிசிசிஐ நேரலை செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி கோரிக்கை..!

மகளிர் உலகக் கோப்பை… பெங்களூருவில் இருந்து நவி மும்பைக்கு மாற்றம்!

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அக்ஸர் படேல் என்ன தப்பு செஞ்சார்?... அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் –முன்னாள் வீரர் ஆதங்கம்!

புரோ கபடி லீக் சீசன் 12: புதிய பலத்துடன் தயாராகி வருகிறது தமிழ் தலைவாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments