Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஆஸி பேட் – டிசைடர் மேட்சில் வெல்லுமா இந்தியா ?

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (13:20 IST)
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிஙகை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20  மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்  தொடரின் முதல் நான்குப் போடிகளிலும் இரு அணிகளும் தலா இருப் போட்டிகளில் வெற்றி  பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதையடுத்து இன்று 5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் நடக்க இருக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்த இந்தியா அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோற்றுள்ளது. இதனால் முக்கியமானப் போட்டியான இந்தப் போட்டியில் வெற்றிபெற முழு முனைப்போடு இந்தியா களமிறங்க உள்ளது. கடந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்ட ராகுல் நீக்கப்பட்டு மீண்டும் ஜடேஜா அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். அதுபோல சஹாலுக்குப் பதிலாக மீண்டும் ஷமி கொண்டுவரப்பட்டுள்ளார்.

இந்திய அணி
தவான், ரோஹித், கோஹ்லி, ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ், விஜய் ஷங்கர், ரவிந்தர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி, குல்தீப், பூம்ரா,
ஆஸ்திரேலிய அணி
ஆரோன் பிஞ்ச், கவாஜா, ஹான்ஸ்கோம்ப், ஸ்டாய்னஸ், மேக்ஸ்வெல், டர்னர், அலெக்ஸ் கேரி, ரிச்சர்ட்ஸன், கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, நாதன் லயன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!

2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments