Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டிங்கில் பதிலடி கொடுக்கும் ஆஸ்திரேலியா! டிராவை நோக்கி சிட்னி டெஸ்ட்

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (07:26 IST)
சிட்னியில் இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் டிராவை நோக்கி போட்டி சென்று கொண்டிருக்கின்றது.

கடந்த 3ஆம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் வரை 40 ஓவர்கலில் 1 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் காவாஜா 27 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது ஹாரீஸ் 77 ரன்களுடனும், லாபுசாஞ்சே 18 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்
மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு இன்னிங்ஸ் கூட முடியவில்லை என்பதால் இந்த போட்டி டிராவில் முடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments