Webdunia - Bharat's app for daily news and videos

Install App

79 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்கள்: "ஸ்மித், நைல் அதிரடியால் 288 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (18:49 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது
 
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான வார்னர், கேப்டன் பின்ச், காவாஜா, மேக்ஸ்வெல், ஸோனிஸ் ஆகிய ஐந்து பேர் சொற்ப ரன்களில் தங்களுடைய விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இதனால் அந்த அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. இந்த நிலையில் பொறுப்புடன் விளையாடிய ஸ்மித் நிதானமாக ரன்களை குவித்து 103 பந்துகளில் 73 ரன்கள் அடித்தார். 
 
ஸ்மித் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய நைல் தனது அதிரடியை தொடங்கினார்.  மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சாளர்களை அவர் பவுண்டரிகள்,, மற்றும் சிக்ஸருமாக விளாசியதால் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது. சதத்தை நெருங்கிய நைல் 92 ரன்களில் ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது இன்னும் சில நிமிடங்களில் 289 என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்யவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மித், டிராவிஸ் ஹெட் அபார சதங்கள்.. மின்னல் வேகத்தில் உயர்ந்த ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுக்கள்: ஆஸ்திரேலியா ஸ்கோர் விவரம்..!

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments