Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியின் விளிம்பில் இந்தியா: ஆஸ்திரேலியா திணறல்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (06:45 IST)
அடிலெய்டில் கடந்த 6ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்றூ இந்தியா வெற்றியின் விளிம்பில் உள்ளது.

323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் சற்றுமுன் வரை ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்களை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. கைவசம் 4 விக்கெட்டுக்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் அந்த அணி 167 ரன்கள் எடுக்க வேண்டியதுள்ளதால் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.

இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மார்ஷ் மட்டும் ஓரளவுக்கு இந்திய பவுலர்களை தாக்குப்பிடித்து 60 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments