Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்னபடி ஆஸ்திரேலியா ஜெயிச்சிடுமோ? – தடுமாறும் இந்தியா!

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (16:26 IST)
ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியாவுடனான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. 2020ம் ஆண்டு தொடங்கி முதலாவதாக இலங்கையுடன் மோதிய இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் தற்போது விளையாட வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணியினர் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக வெற்றியை அளிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அது முதலே இந்தியாவுக்கு கடினமான போட்டியை வழங்கி வருகிறது. இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனான ரோகித் ஷர்மா 10 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து ஷிகார் தவான் சிறப்பான ஆட்டத்தை அளித்து 74 ரன்கள் குவித்தார். கே,எல். ராகுல் அரைசதம் வீழ்த்த 3 ரன்கள் மீதமிருந்த நிலையில் 47 ரன்களில் அவுட் ஆனார். கேப்டன் கோலியை பலரும் நம்பியிருக்க அவரும் 16 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். தற்போது 39 ஓவர்கள் முடிவில் 186 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்தியா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments