Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது வெற்றிக்கு இது தான் காரணம்; ஆனால் அரசியல் வேண்டாம் ப்ளீஸ்: அஷ்வின்!!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (11:28 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. 


 
 
இதில், கடந்த ஆண்டு டெஸ்ட், ஒரு நாள் போட்டி, இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த விராட் கோஹ்லிக்கு சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது.
 
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 2 சதம் அடித்ததுடன், 17 விக்கெட்களைக் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின், திலிப் சர்தேசாய் விருது வழங்கப்பட்டது. 
 
இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினியரும் கலந்து கொண்டார். அவர் அஷ்வினிடம், கர்நாடகா தண்ணீர் பி.எஸ்.சந்திரசேகர், பிரசன்னா உள்ளிட்ட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளது. கர்நாடகா தண்ணீரில் அப்படி என்ன இருக்கிறது? உங்கள் வெற்றிக்கு என்ன காரணம்?' என கேள்வி எழுப்பினார். 
 
இந்த கேள்விக்கு பதிலளித்த தமிழக வீரர் அஸ்வின், எனது பதிலை அரசியலாக்கி விட வேண்டாம். எங்களிடம் காவிரி தண்ணீர் உள்ளது. அதுதான் எனது வெற்றிக்காக காரணம் என நினைக்கிறேன் என தெரிவித்தார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விருதை இரண்டாவது முறையாக வென்ற பேட் கம்மின்ஸ்!

பிசிசிஐ-யின் புதிய விதி கோலிக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும்.. பிராட் ஹாக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments