Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸி வீரர்கள் என்னை ஸ்லெட்ஜ் செய்ய மாட்டார்கள்… காரணம் வார்ன்தான் –கும்ப்ளே சொன்ன ரகசியம்!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (10:16 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஷேன் வார்ன் சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் தாய்லாந்தில் மரணமடைந்தார்.

உலகிலேயே மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே(52) சமீபத்தில் தாய்லாந்து சென்றதாகவும் அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஷேன் வார்னின் இந்த திடீர் மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் ஆகியோரை மீளாத்துயரில அழ்த்தியுள்ளதும். பலமுன்னாள் வீரர்களும் ஷேன் வார்னுடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்துவருகின்றனர். அப்படி இந்திய அணியின் மூத்த சுழல்பந்து வீச்சாளருமான வார்னின் சமகால போட்டியாளர்களில் ஒருவருமாக கருதப்படும் கும்ப்ளே வார்ன் பற்றிய ஒரு ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

’நான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பேட் செய்ய செல்லும்போது வீரர்கள் என்னை ஸ்லெட்ஜ் செய்யமாட்டார்கள். அதற்குக் காரணம் வார்ன்தான். வார்ன் தன்னுடைய நட்பு வட்டத்தை அப்படிதான் முக்கியமான இடத்தில் வைத்திருந்தார். ’எனக் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஸ்லெட்ஜிங் பாணி கிரிக்கெட் உலகில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments