Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கண்பார்வைப் பிரச்சனைக்கு தீர்வாக அமைந்தவர் கும்ப்ளே! பாகிஸ்தான் பவுலர் நெகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (08:36 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான சக்லைன் முஷ்டாக் தனது பார்வைக் குறைபாடு சரியாவதற்கு கும்ப்ளே உதவியதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சுழல்பந்து ஜாமபவானானா சக்லைன் முஷ்டாக் 1995 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானுக்காக 49 டெஸ்ட் போட்டிகளிலும், 169 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியவர். அவர் விளையாடியக் காலங்களில் கண்பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாகவும் அதற்கு கும்ப்ளேதான் சிறந்த மருத்துவரை பரிந்துரைத்து அதை சரிசெய்ய உதவினார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ‘எனக்கு பவுண்டரி அருகே பீல்ட் செய்யும் போது பந்து வருவது சரியாக தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் பீல்டிங்கில் மந்தமாக செயல்பட்டேன். ஒருமுறை இங்கிலாந்தில் வைத்து இதுபற்றி கும்ப்ளேவிடம் பேசியபோது லண்டனில் இருக்கும் டாக்டர் பரத் லுகானியை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார். அப்போது அவரும் கங்குலியும் அவரிடம்தான் சிகிச்சைப் பெற்று வந்தனர். அவர் பரிந்துரைந்த மருத்திவரிடம் சென்று சிகிச்சை பெற்ற பின் பார்வை குறைபாடு முழுமையாக நீங்கியது. உண்மையில் கும்ளே சிறந்த பண்பாளர்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments