Webdunia - Bharat's app for daily news and videos

Install App

79 ஆண்டுகளுக்கு பிறகு டெவிஸ் கோப்பையை வென்ற பிரிட்டன் அணி

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2015 (14:49 IST)
பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில் 79 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டன் அணி சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

 
பெல்ஜியத்தின் கென்ட் நகரில் கடந்த மூன்று நாட்களாக இங்கிலாந்து - பெல்ஜியத்திற்கு இடையேயான டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில் இறுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றிலும், இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்றிருந்த பிரிட்டன் அணி 2-1 என்ற நிலையில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாற்று ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிரிட்டனின் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே, பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர்த்து விளையாடினார்.
 
இந்தப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆன்டி முர்ரே ஆட்ட நேர முடிவில் 6-3, 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று டெவிஸ் கோப்பையை பிரிட்டன் அணிக்கு உறுதி செய்தார் . இதையடுத்து, 3-1 என்ற கணக்கில் 79 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டன் அணி டேவிஸ் கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. கடைசியாக 1936ஆம் ஆண்டு பிரிட்டன் அணி டேவிஸ் கோப்பையை வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

Show comments