Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறைவடைந்தது குளிர்கால பாராலிம்பிக் போட்டி: பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (10:45 IST)
தென்கொரியாவில் நிறைவடைந்த குளிர்கால பாராலிம்பிக் போட்டியில் 36 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது

 
 
தென்கொரியாவில் உள்ள பியாசாங் நகரில் மாற்றுதிறனாளிகள் பங்கேற்கும்  12-வது குளிர்கால பாராலிம்பிக் போட்டிகள் கடந்த மார்ச் 9-ஆம் தேதி கோலகலமாக தொடங்கியது.  இந்த பாராலிம்ப்க் போட்டியில் உறைபனியில் விளையாடும் பனிசறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட ஆறு வகையான போட்டிகள் நடைபெற்றன.
 
இதில் அஸ்திரேலியா, அமெரிக்கா, ஈரான், சீனா, பிரேசில், கனடா உள்ளிட்ட 49 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் போது ரஷ்ய வீரர் ஒருவர்  ஊக்க மருந்து பயன்படுத்தியதால். பாராலிம்பிக் ஒலிம்பிக் கமிட்டி, ரஷ்ய நாட்டு வீரர்களை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.
 
இந்நிலையில், நேற்று பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. இந்த போட்டியில் அமெரிக்கா அணி 13 தங்கம், 15 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. தனிப்பட்ட வீரர்களாக களமிறங்கியவர்கள் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடம் பிடித்தனர். மூன்றாவது இடத்தை கனடாவும், நான்காவது இடத்தை பிரான்ஸூம், ஐந்தாவது இடத்தை ஜெர்மனியும் பிடித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments