Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதெல்லாம் கொஞ்சம் அதிகம்… ரஹானே, புஜாராவுக்கு ஆதரவாக முன்னாள் வீரர்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:17 IST)
ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் டெஸ்ட் அணியில் இடம்பெறாதது குறித்து மூத்த வீரர் அஜய் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் மோசமான பார்மில் இருந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் பங்களிப்புக்காக அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா தொடரின் தோல்விக்குப் பிறகு இப்போது அணியின் தலைமை ரோஹித் ஷர்மாவிடம் சென்றுள்ளது.

இந்நிலையில் அடுத்த டெஸ்ட் தொடரில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் கழட்டிவிடப்பட்டுள்ளனர். அணியில் பல இளம் வீரர்கள் காத்திருப்பதால் இனிமேல் அவர்கள் இருவரும் அணிக்குள் வருவது கடினம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ‘அவர்களின் நீக்கம் வருத்தமாக உள்ளது. இருவரும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடும் வீரர்கள். அவர்களை அணியில் இருந்து நீக்கிவிட்டால் மீண்டும் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அடுத்த தலைமுறை வீரர்கள் அவர்களை தள்ளிவிட்டனர்.கிர்க்கெட்டில் பலருக்கு அவர்கள் விரும்பிய வகையில் ஓய்வு பெற வாய்ப்புக் கிடைத்ததில்லை. அது இப்போதும் தொடர்கிறது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments