Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (18:34 IST)
நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி பெற்ற நிலையில் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராத் கோஹ்லி ஆகிய இருவரும் தங்கள் ஓய்வு முடிவை அறிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் ஜடேஜாவும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்ல வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது என்றும் அந்த கனவு தற்போது நிறைவேறிவிட்டதை அடுத்து ஓய்வு முடிவை அறிவிக்கிறேன் என்றும் இதுநாள் வரை எனக்கு ஆதரவாளித்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஒரே நாளில் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று டி20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த மூவருக்கு பதில் அணியில் சேர இருப்பது யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு 50 ரன்லாம் பத்தாது.. அவருக்கு ஜெயிக்கணும் அவ்ளோதான்! - எம்.எஸ்.தோனி!

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments